சென்னை நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் கிடைத்த முதலீடுகளின் விவரம் வெளியாகி உள்ளது. கடந்த 2 நாட்களாகச் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு நிறைவு பெற்றுள்ளது. மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி உள்ளனர். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு ரூ.6,64,180 கோடி முதலீடு வந்துள்ளது. இந்த முதலீடுகள் குறித்த முழு விவரம் வருமாறு டாடாபவர் தெற்கு தெற்கு தமிழகத்தில் 10 GW சூரிய மற்றும் காற்றாலை திட்டங்களை அமைக்க 70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. அதானிகுழுமம் மாநிலத்தில் 42,768 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. அதாவ்து அதானி பசுமை ஆற்றல் – 24,500 கோடி,- அதானி கானெக்ஸ் – 13,200 கோடி, அதானி மொத்த எரிவாயு & சிஎன்ஜி […]
