அரசியலில் இருந்து அம்பதி ராயுடு விலக மும்பை இந்தியன்ஸ் தான் காரணம்?

Ambati Rayudu: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியில் (YSRCP) சேர்ந்த எட்டு நாட்களிலேயே எதிர்பாராதவிதமாக விலகியதால், அரசியல் வட்டாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அம்பதி ராயுடு தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியான MI எமிரேட்ஸுக்கு இந்த ஆண்டு லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார் அம்பதி ராயுடு. முன்னாள் மும்பை வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராகவும் இருந்த ராயுடு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் ILT20ன் இரண்டாவது சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் சார்பில் விளையாட உள்ளார்.  தொழில்முறை விளையாட்டுகளில் பங்கேற்கும் போது அரசியல் சார்பற்ற நிலையைத் தக்கவைக்க இந்த முடிவை எடுத்துள்ளார்.  

YSRCP கட்சியில் இருந்து விலகல்

டிசம்பர் 28, 2023 அன்று YS ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் அம்பதி ராயுடு யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது ஆந்திரா அரசியல் வட்டாரங்களில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  இருப்பினும், ஒரு வாரத்திற்குள் அவர் வெளியேறியது பலரை சங்கடப்படுத்தியது.  ராயுடு தனது இந்த முடிவை X தளத்தில் தெரிவித்து இருந்தார்.  துபாயில் ஜனவரி 20 முதல் துவங்க உள்ள ILT20 சீசனுக்கான தனது நிலைப்பாட்டை வலியுறுத்தினார். ராயுடு தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “நான், அம்பதி ராயுடு, துபாயில் வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் ILT20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவேன். தொழில்முறை விளையாட்டை விளையாடும் போது நான் அரசியல் ரீதியாக சம்பந்தமில்லாமல் இருக்க வேண்டும்” என்று அதில் கூறி இருந்தார். 

This is to inform everyone that I have decided to quit the YSRCP Party and stay out of politics for a little while. Further action will be conveyed in due course of time.

Thank You.

— ATR (@RayuduAmbati) January 6, 2024

I Ambati Rayudu will be representing the Mumbai Indians in the upcoming ILt20 from jan 20th in Dubai. Which requires me to be politically non affiliated whilst playing professional sport.

— ATR (@RayuduAmbati) January 7, 2024

ஐபிஎல்

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களின் ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல, முக்கிய பங்கு வகித்தவர் ராயுடு. இந்தியன் பிரீமியர் லீக்கின் போது 2017ல் மும்பை இந்தியன்ஸை விட்டு வெளியேறி சென்னை அணியில் இணைந்தார்.  இப்போது, ​​ஜனவரி 19 முதல் பிப்ரவரி 17 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் திட்டமிடப்பட்ட வரவிருக்கும் ILT20ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு பிறகு அரசியலில் நுழைவதாக ராயுடு கூறி இருந்தார். இந்நிலையில், தற்போது ஒய்எஸ்ஆர்சிபியில் இருந்து விலகிய நிலையில், தொழில்முறை கிரிக்கெட்டில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்து காட்டுகிறது. ILT20ல் ராயுடுவின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.