சென்னை இன்றும் தமிழகம் முழுவதும் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன. நேற்று முதல் தங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இதையொட்டி தமிழக அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே திட்டமிட்டபடி பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். ஆனால் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய போதிலும் தமிழகம் முழுவதும் பேருந்துகள் நேற்று வழக்கம்போல் ஓடின. […]
