மூன்றுநாள் அதிரடி கொண்டாட்டம் : ஜீ தமிழின் பொங்கல் ஸ்பெஷல் லிஸ்ட் இதோ

தமிழ் சின்னத்திரை முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீதமிழ். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விப்பதிலும் ஜீ தமிழ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

அந்தவகையில் இந்த வருட பொங்கலுக்கு போகி பண்டிகை நாளிலிருந்தே சிறப்பு திரைப்படத்துடன் கொண்டாட்டத்தை தொடங்க உள்ளது ஜீ தமிழ்.

ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று மதியம் 3:30 மணிக்கு அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான ஜவான் திரைப்படத்துடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ம் தேதி தைத் திருநாள் அன்று காலை 8:30 மணி முதல் பத்து மணி வரை சுகிசிவம் தலைமையில் நமது குடும்ப அமைப்பில் பெரும் மாற்றங்கள் தேவை, தேவையில்லை என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

அதைதொடர்ந்து காலை 9:30 மணி முதல் 12:30மணிவரை மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை நினைவு கூறும் வகையில் திரளான பிரபலங்கள் பங்கேற்கும் சல்யூட் டூ கேப்டன் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. நல்ல மனிதராக நடிகனாக, நண்பனாக, வழிகாட்டியாக, தலைவனாக, என ஒவ்வொரு விதத்திலும் விஜயகாந்த்தின் குணத்தை பற்றி பிரபலங்கள் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் இரண்டு மகன்களும் பங்கேற்க இருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மதியம் 2:30 மணி முதல் 4:00 மணி வரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்ஜேசூர்யா இணைந்து கலக்கிய மெகாஹிட் சூப்பர் திரைப்படமான மார்க் ஆண்டனியின் டெலிவிஷன் பிரிமியர் ஒளிபரப்பாக உள்ளது.

பிறகு மதியம் 4:00 மணி முதல் 7 மணிவரை ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற காதர்பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஒளிபரப்பாகஉள்ளது.

மறுநாள் மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 16ம்தேதி காலை 8:30 மணிக்கு சுகி சிவம் தலைமையில் கிராமங்கள் நகரங்களாவது கொடையா? கொடுமையா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

தொடர்ந்து காலை 10 மணி முதல் 12:30 மணி வரை சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் -ன் வெற்றி கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் மதியம் 12:30 மணி முதல் 4.00 மணி வரை ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரன் படத்தின் டெலிவிஷன் பிரிமியர் ஒளிபரப்பாகஉள்ளது.

தொடர்ச்சியாக மதியம் 4 மணிமுதல் 7 மணி வரை ஜில்லுனு ஒரு காதல் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து கலக்கிய பத்து தல திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட பொங்கலை ஜீ தமிழோடு இணைந்து கொண்டாட தயாராகுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.