கர்நாடக மாநிலம் நிபானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறினார். மேலும், ராமர் பெயரில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார். கும்பாபிஷேக விழாவிற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 11 நாள் உண்ணாவிரதம் குறித்து பேசிய பவார், “ராமர் மீது அவருக்கு உள்ள பக்தியை நான் மதிக்கிறேன், […]
