2023 (2024) க.பெ.த உயர்தரப் பரீட்சை 2024.02.01 ஆம் திகதி வரையில் நடைபெறும் என்பதால், 2024.02.01 ஆம் திகதி ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த 2023 பாடசாலை வருடத்தின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் (சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகள்) மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024.02.05 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோன்று சகல பாடசாலைகளதும் 2023 பாடசாலை வருடத்தின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024.02.16 வெள்ளிக்கிழமை முடிவடையும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.