மோகோசந்த் பிரதம்ர் மோடி நாகா அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண எதுவும் செய்யவில்லை என ராகுல் காந்தி உரையாற்றி உள்ளார். கடந்த 2015 ஆம் அண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுடன் அமைதி ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டது. பிறகு 2017-ல் அரசியல் குழுக்களுடன் உடன்பட்ட நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. அயினும், நாகாக்களுக்கு தனிக் கொடி மற்றும் அரசியலமைப்பு கோரிக்கையில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் பிடிவாதமாக இருப்பதால் இறுதித் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி […]
