
திருமண வதந்தி : விஜய் தேவரகொண்டா கூறியது என்ன ?
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. அவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறப் போவதாக கடந்த சில வாரங்களாக செய்தி பரவி வந்தது. அது வதந்தியா, உண்மையா என்பது தெரியாமலேயே செய்தியானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். “பிப்ரவரி மாதம் எனக்கு திருமணமோ, நிச்சயதார்த்தமோ நடக்கப் போவதில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இது போன்ற வதந்தியைக் கேட்டு வருகிறேன். விட்டால் என் கையைப் பிடித்து எனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா பதிலளித்துவிட்ட நிலையில் ராஷ்மிகா இது பற்றி இன்னும் எதுவும் சொல்லவில்லை.