சேலம்: திமுக இளைஞரணி மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக அமைச்சரும், இளைஞரணி மாநிலச் செயலாளருமான உதயநிதியின் மகன் இன்பநிதி நேற்று முன்தினம் சேலம் வந்திருந்தார். திமுக இளைஞரணிச் சின்னம் பொறித்த டி -சர்ட் அணிந்து வந்திருந்த அவரை அடையாளம் கண்ட திமுகவினர், ஆரவாரம் செய்தனர்.
மாநாட்டுத் திடலில் முகப்பில் போடப்பட்டிருந்த மேடையில் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். அந்த வரிசைக்குப் பின் வரிசையில் இன்பநிதியும் அமர்ந்து ‘ட்ரோன் ஷோ’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.
இதேபால, நேற்று நடைபற்ற மாநாட்டில் மேடையின் கீழே அமைக்கப்பட்டிருந்த விவிஐபிக்களுக்கான வரிசையில் இன்பநிதி, ஸ்டாலின் மருமகன் சபரீசன், அவரது மனைவி செந்தாரை உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
உதயநிதி தலைமயில் நடைபறும் மாநாட்டைக் காண ஸ்டாலின் குடும்பத்தினர் ஆர்வத்துடன் வந்திருந்தது திமுகவினரிடையே பேசுபொருளாக இருந்தது.