சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நெஞ்சுவலிப்பதாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 6 மாதமாக சிறையில் இருந்து வருகிறார். அவரது அமைச்சர் பதவியை பறிக்காமல் தமிழ்நாடு […]
