யானை தாக்குதலில் இருந்து மனிதர்களை காக்க 4 கும்கி யானைகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று ஒடிசா அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக வனம், சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை செயலர் சுப்ரியா சாஹூவுக்கு ஒடிசா மாநில வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சத்யபிரதா சாஹு, அண்மையில் கடிதம் எழுதியுள்ளார். “தமிழ்நாடு கும்கி யானைகளை வனவிலங்கு பாதுகாப்பு நோக்கத்திற்காக வெற்றிகரமாகப் பயிற்றுவித்து பயன்படுத்தியுள்ளது. ஒடிசாவில் மனித-யானை மோதல் […]
