அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் சிலை திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் அயோத்தியில் குவிந்தனர். அதேவேளையில் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எல்.இ.டி. திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவுக்காக நேற்று அயோத்தியில் குவிந்த பக்தர்கள் அனைவரும் இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
