
செல்வி அம்மா டூ தாயம்மா! ராதிகாவிற்கு நன்றி சொன்ன பிரகர்ஷிதா
தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பிரகர்ஷிதா. சந்திரமுகி படத்திலும் வேலன் சீரியலிலும் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். அதன்பின் கேமரா முன் தோன்றாத பிரகர்ஷிதா தற்போது திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டார். இந்நிலையில், அவரை நீண்ட இடைவேளைக்கு பிறகு ராதிகா தனது சீரியலில் நடிக்க அழைக்க வந்துள்ளார். ராதிகா, பிரகர்ஷிதா காம்போவில் செல்வி சீரியலுக்கு பிறகு தற்போது தாயம்மா குடும்பத்தார் என்கிற தொடர் டிடி பொதிகை சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனையொட்டி தனக்கு வாய்ப்பளித்த ராதிகாவிற்கு பிரகர்ஷிதா நன்றி தெரிவிக்கும் வகையில் செல்வி அம்மா டூ தாயம்மா என இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.