வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்துவரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்து 190 ரன் முன்னிலை பெற்று ஆல்அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 3வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் போப் (148), ரேகன் அகமது (16) அவுட் ஆகாமல் இருந்தனர்.
4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரேகன் அகமது 28 ரன்னில் வெளியேறினார். டாம் ஹார்ட்லி (34) அஸ்வின் சுழலில் போல்டானார். மார்க் உட் (0) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடிய போப், இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 196 ரன்னில் பும்ரா வேகத்தில் போல்டானார். முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்., அஸ்வின் 3 விக்., ஜடேஜா 2 விக்., அக்சர் படேல் 1 விக்., வீழ்த்தினர். இதனையடுத்து 230 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement