வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஸ்டாண்டர்ட் சார்ட்டர் பிஎல்சி என்ற உலகளாவிய வங்கியின் தலைவராக இருந்த முதல் இந்தியரான மூத்த வங்கியாளர் ராணா தல்வார் என்றழைக்கப்படும் குர்வீந்தர் சிங் தல்வார் 76-வது வயதில் காலமானார்.
1948-ம் ஆண்டில் பிறந்த தல்வார் டில்லியின் புகழ்பெற்ற ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பயின்றார்.பின்னர் சிட்டி வங்கியில் தனது பணியை துவக்கினார். பின்னர்ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வங்கியின் சில்லறை வணிகத்துறையில் பொறுப்பேற்றார்.தொடர்ந்து சிட்டி பேங்க் மற்றும் சிட்டி குரூப் பாலிசி , ஆப்பரேட்டிங் கமிட்டிகளில் உறுப்பினராகவும் இருந்தார்.
1966-ம் ஆண்டில் சிட்டி வங்கியை விட்டு வெளியேறி ஸ்டாண்டர்ட் சார்ட்டர் பிஎல்சியில் குளோபல் தலைமை நிர்வாகியாக சேர்ந்தார்.தொடர்ந்து ஏஎன்இசட் வங்கியிடம் இருந்து கிரைண்ட்லேஸ் வங்கியை கையகப்படுத்துவது உட்பட ஸ்டாண்டர்ட் சார்ட்டர் பிஎல்சியை முன்னணி சந்தை வங்கியாக மாற்றுவதற்கு அவர் முன்னிலையில் இருந்தார்.
2002-ம் ஆண்டில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர் பிஎல்சியை விட்டு வெளியேறிய போதிலும் அதன் தலைவராகவும், பெரும்பான்மை பங்குதாரராகவும் ஒருதனியார் நிறுவனமான சேபர் கேபிட்டல் வேர்ல்டு வைடு நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனத்தின் மூலம் செஞ்சுரியன் வங்கியின் பங்குகளை வாங்குவது முக்கியமானதாக கருதப்பட்டது. தொடர்ந்து நிறுவனத்தை எச்டிஎப்சி வங்கியுடன் இணைத்தார்.
மறைந்த ராணா தல்வாருக்கு ரேணுகா என்ற மனைவியும் ராகுல் என்ற மகனும் உள்ளனர். இவர் டிஎல்எப் குழுமத்தலைவர் எமரிட்டஸ் கே.பி.சிங்கின் மருமகனாவார்.டிஎல்எஃப் தவிர, ஆசாஹி இந்தியா கிளாஸ் லிமிடெட் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வாரியங்களில் பணியாற்றி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement