சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இலங்கைக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பூரண உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது சமூக ஊடக பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்படத்தக்கது.