சென்னை பிரபல தமிழ் நடிகர் இளவரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் தங்கள் சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாகப் புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது. குறிப்பிட்ட காலத்திற்குள் காவல்துறையினர் விசாரணையை முடிக்கவில்லை […]
