
புதிய தொடரில் கம்பேக் கொடுக்கும் சிபு சூரியன்
ரோஜா சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் சிபு சூரியன். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அந்த தொடருக்கு சரிவர வரவேற்பு கிடைக்காத நிலையில் விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்த சிபு சூரியனுக்கு தற்போது ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள தொடரில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு ஜோடியாக பேரன்பு தொடரில் ஹீரோயினாக நடித்த வைஷ்ணவி அருள்மொழி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரின் பெயர் மற்றும் ஏனைய விவரங்கள் மிகவிரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.