பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு

இராணுவ பரசூட் வீரராக தனது திறமையை வௌிக்காட்டிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே (02) ஜனாதிபதி அலுவலகத்தில் பாராட்டி, கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை இராணுவத்தின் பரசூட் சாகச வரலாற்றைப் புதுப்பிக்கும் வகையில் குடாஓயா கொமாண்டோ ரெஜிமண்ட் பயிற்சி பாடசாலையில் கடந்த 22ஆம் திகதி இராணுவத் தளபதி பரசூட் சாகசம் செய்தார்.

இராணுவத் தலைமைத்துவத்திற்கு முன்னுதாரணமாக செயற்பட்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் முயற்சியையும், அர்பணிப்பையும் பாராட்டி இராணுவ தளபதிக்கு எயார்போன் (Airborne) சின்னம் அணிவிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.