எமது மூதாதையர்கள் பெருமைமிக்க வரலாற்றை உருவாக்கினார்கள். அவர்களது வழித்தோன்றல்களான நாம் அந்த பெருமைக்குரிய வரலாற்றை அடுத்த தலைமுறையினரிடம் கையளிப்போம்.
காலத்துக்கு காலம் அந்நிய பேரரசுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு முகங்கொடுத்து போரால், குருதியால்,வியர்வையால், போராட்டங்களால், புலமையால் ஊட்டம் பெற்று கிடைத்த சுதந்திரத்தின் 76 ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறோம்.
1818 மற்றும் 1848 தேசிய விடுதலை போர்கள் உள்ளீட்ட பல போர்கள், 1948 வரை மதத்தலைவர்கள் மற்றும் மக்கள் தலைவர்கள் மேற்கொண்ட சிந்தனை மற்றும் புரட்சிகரமான போராட்டங்கள் மூலம் 1948 ஆம் ஆண்டில் நாம் விடுதலை பெற்றோம். இந்த வேளையில் அவர்களை பெருமையுடன் நினைவு கூறுவோம்.
அந்த சுதந்திரத்தின் பின்னர் கூட 1956 மக்கள் கிளர்ச்சி, 1972 குடியரசு அரசியல் யாப்பு மூலம் பெற்ற முழுமையான விடுதலை, முப்பது ஆண்டுகால போரை முடிவுறுத்துவதற்காக உயிரையும், உடலுறுப்புகளையும், குருதியையும் கொடையாக கொடுத்த போர் வீரர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து, மீண்டும் சரியான இலக்கை நோக்கி பயணிக்கும் காலத்தில் இந்த தடவை சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். உணவுப் பாதுகாப்பு. கிராமிய புத்தெழுச்சி மற்றும் உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கிய பல செயற்பாடுகளில் ஈடுபட்டு அந்த சிரமமான தடைகளை தாண்டியுள்ளோம்.
அந்த சவால்களை வெற்றிகொண்டு, சுபீட்சமான தேசத்தைக் கட்டியெழுப்பும் திடசங்கற்பத்துடன் பொருளாதாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் 76 ஆவது தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
அதற்கமைய சுதந்திரத்தைப் பாதுகாத்து, நாட்டின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைந்து முன்நோக்கி பயணிப்போம்.
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு