
விஜய்க்கு தங்கையாகும் பிரபல ஒளிப்பதிவாளர் மகள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரம் ஒன்று உள்ளதாகவும் இதில் இவானா நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால், அவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டன் மகள் அப்யுக்தா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.மேலும், இவர் பரதநாட்டிய நடன கலையிலும் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.