பின்தங்கிய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு விவசாய அமைச்சினால் ஆடு வளர்ப்பு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கியவாறு, ஒரு பயனாளிக்கு சுமார் 75000 ரூபாய் பெறுமதியான மூன்று ஆடுகள் வீதம் வழங்கப்படுகின்றது.
இந்த வகையில், மன்னர் மாவட்டத்தில் மொத்தமாக 120 பயனாளிகளுக்கான ஆடுகள் வழங்கும் வேலை திட்டத்தின் கீழ் மன்னார் நகர பிரதேச பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 32 பயனாளிகளில் முதற்கட்டமாக 7 பயனாளிகளுக்கு வளர்ப்புக்கான ஆடுகள் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இன்று(5) மேலும் ஒரு தொகுதியாக 10 பயனாளிகளுக்கான 30 ஆடுகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு கணேசன் அவர்களினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் , கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.