
300 கோடி வசூலை கடந்த ‛பைட்டர்'
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே, அனில் கபூர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து, ஜன., 25ல் ஹிந்தியில் வெளியான படம் ‛பைட்டர்'. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வெளியான 10 நாட்களில் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தியாவில் ரூ.217 கோடியும், வெளிநாடுகளில் ரூ.85 கோடியும் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்திய விமான படையின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது.