
லால் சலாம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா இயக்கி உள்ள படம் 'லால் சலாம்' . நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இதில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டோடு, மத நல்லிணக்கத்தையும் இந்த படம் பேச உள்ளது. திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாவதைத் ஒட்டி தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்ததாக படக்குழு அறிவித்துள்ளனர்.