கவுகாத்தி அசாம் மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மக்களவை தேர்தலை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திப்ருகார் தொகுதிக்கு மனோஜ் தனோவர், கவுகாத்திக்கு டாக்டர்.பாபென் சவுத்ரி, சோனித்பூர் தொகுதிக்கு ரிஷி ராஜ் கவுண்டினியா ஆகியோரின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் சந்தீப் பதக் செய்தியாளர்களிடம், “மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அசாம் மாநிலத்தில் இருந்து 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். இந்த […]
