பணம் சம்பாதிப்பது ஒரு கலை என்று சொல்வார்கள். கலையா அப்படியென்றால் அது சிலருக்குதான் வரும், நமக்கெல்லாம் வராது என்று நினைப்பவர்கள்தான் இங்கு அதிகம். ஆனால், எல்லோராலும் பணத்தை நிர்வகிக்கும் கலையைக் கற்றுக்கொள்ள முடியும். அதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும் அவ்வளவுதான்.
வருமானம், செலவு, கடன், பணவீக்கம், வட்டி விகிதம், முதலீட்டு வகைகள் போன்ற சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டாலே பணம் சம்பாதிக்கும் கலையைப் பாதிக் கற்றுக்கொண்டது போல்தான். ஆனால், இதைக் கற்றுக்கொள்ள எல்லோருக்கும் நேரமிருக்காது, வாய்ப்பிருக்காது. அதனாலேயே நம்மில் பலர் பணம் சம்பாதிக்கும் கலையைக் கற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால், இருந்த இடத்திலிருந்தே இவை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள இன்று வாய்ப்புகள் பெருகிவிட்டன. விரல் நுனியில் மொபைலில் எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. ஆனால், அவற்றில் எது சரியான தகவல், எது சரியான வழிமுறை, யாருக்கு எந்த அணுகுமுறை சரியானது என்பதில்தான் சிக்கல்களும் குழப்பங்களும் உள்ளன. அதைத் தெளிவுபடுத்திக்கொள்வதுதான் மிகவும் அவசியம்.
முன்பதிவு செய்ய https://bit.ly/3NUyxyu என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
அதையெல்லாம் சரிசெய்து உங்களுக்கு முறையான வழிகாட்டுதலை வழங்குவதைத்தான் நாணயம் விகடன் இத்தனை ஆண்டுகளாகச் செய்துவருகிறது. தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முதன்மையாகச் செயல்பட்டுவருகிறது. அந்தவகையில் தற்போது நாணயம் விகடன் `நிம்மதியான வாழ்க்கைக்கு நிதித் திட்டமிடல்..!’ என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது. 2024 பிப்ரவரி 17, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. வீட்டிலிருந்தபடியே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

தனிநபர் நிதியியல் நிபுணர் (www.ducatz.in) ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இவர் தனிநபர் நிதி மேலாண்மையில் 15 ஆண்டுகளுக்கும் மேல் நிபுணத்துவம் பெற்றவர். தனிநபர் நிதி, நிதித் திட்டமிடல், காப்பீடு, குடும்ப பட்ஜெட், முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புக்குக் கட்டணம் ரூ.300 மட்டுமே.
இந்த நிகழ்ச்சியில், சரியான சேமிப்பு & முதலீட்டு ஃபார்முலா, எதிர்கால நிதி பாதுகாப்பு வழங்கும் திட்டங்கள், முதலீட்டை பிரித்து மேற்கொள்ளும் கலை, வருமான வரிச் சேமிப்பு, முக்கிய நிதி இலக்குகளுக்குத் திட்டமிடல், முறையான முதலீட்டு முறைகள் மூலம் நல்ல லாபம் அடைதல் ஆகிய விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன. பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பணம் சம்பாதிக்கும் கலையை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.
முன்பதிவு செய்ய https://bit.ly/3NUyxyu என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.