பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச விலை…

இந்த ஆண்டு பெரும்போகத்தில்; விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாட்டை அரசு மேற்கொண்டுள்ளதுடன், நெல் கொள்வனவு செய்வதில் விவசாயத்த திணைக்களம் கடைபிடிக்கும் குறைந்தபட்ச விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள், நெல் களஞ்சிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், நெல்லை சேகரிப்போர் ஆகிய 3 துறைகளுக்கும் சலுகை கடன் அடிப்படையில் அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடன் தொகையொன்றினை வழங்கி, அவர்கள் ஊடாக நெல்லை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயத் திணைக்களத்தினால் முன்வைகக்கின்ற நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்வனவு விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆதன்படி, நிதியமைச்சின் பூரண கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கான நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்வனவு விலைகளை விவசாய திணைக்களம் முன்வைத்துள்ளது.

இந்த கடன் திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இதன் கீழ் 2023/2024 பெரும்போக நெல் அறுவடைகளை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்.

விலைகள் பின்வருமாறு.

ஈரப்பதம் 14 சதவீதம் உள்ள நெல்லுக்கு..

நாட்டரிசிக்கான ஒரு கிலோ நெல் விலை ரூ. 105

சம்பா ரூ. 120

கீரி சம்பா ரூ. 130

14 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லுக்கு..

நாட்டரிசிக்கான ஒரு கிலோ நெல் விலை ரூ. 90

சம்பா ரூ. 100

கீரி சம்பா ரூ. 120

இந்த அரிசியை கொள்வனவு செய்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபா கடனாகவும், நெல் களஞ்சிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் நெல்லை சேகரிப்பவர்களுக்கு 25 மில்லியன் ரூபாவை அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாகவும் அரசாங்கம் வழங்கவுள்ளது.

அத்துடன் இந்த நெல் கொள்வனவு மேற்பார்வையை விவசாய அபிவிருத்தி திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து செயற்படுத்துவதுடன், இந்த விலைகளின் படி 2023/2024 பெரும்போக நெல் அறுவடைக்கு அதிகூடிய விலையை வழங்கக்கூடியதாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.