கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா!!

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘எழுச்சிப் பொங்கல் விழா – 2024’ கடந்த வியாழக்கிழமை (08) வந்தாறுமூலை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து நடாத்திய இந்நிகழ்வின் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன்போது 108 பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டதுடன், பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பொங்கல் விழாவில் பிரதி உபவேந்தர் கலாநிதி பிரபாகரன், கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் வினோவபா, விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் புனிதா பிரேமானந்தராஜா, வர்த்தக முகாமைத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் ராஜேஸ்வரன், கலை கலாச்சாரபீட பீடாதிபதி கலாநிதி குணபாலசிங்கம் ஆகியோருடன் பல்கலைக்கழக பதிவாளர் பகிரதன், நிதியாளர் பாரிஸ் மற்றும் கல்விசார், நிருவாக, கல்விசாரா அத்துடன் மாணவர்களின் பங்குபற்றலுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களின் நடனம், களி இசை, குழு நடனம், குழுப் பாடல், சிங்களப் பாடல், கண்டிய நடனம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.