US Wonderful Place To Study, Be Safe: Envoy After Indian Students Deaths | “கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது”: அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா படிப்பதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் ஒரு அற்புதமான இடம் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலரும் படித்து வருகிறார்கள். வளர்ந்த நாடான அமெரிக்காவில் நல்ல சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகள் கிடைப்பதால் அங்கேயே செட்டிலாகிவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

பாதுகாப்பானது

இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறியிருப்பதாவது: எந்தவொரு சோகம் நிகழும் போதும் எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது. அமெரிக்கா படிப்பதற்கும், பாதுகாப்பாக இருப்பதற்கும், ஒரு அற்புதமான இடம்.

உலகில் உள்ள எந்த நாட்டையும் விட அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். கடந்த ஆண்டு 2,00,000 விசாக்கள் வழங்கப்பட்டன. கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.