த்ரீ இடியட்ஸ் என்ற இந்தி படம், 2012-ம் ஆண்டு தமிழில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் `நண்பன்’ என்ற பெயரில் வெளியானது. அதில் வரும் ஒரு காட்சியில் ஜீவாவின் அப்பாவை அவசர சிகிச்சைக்காக பைக்கில் விஜய் அழைத்துச் செல்வார். அது போன்ற ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலிலிருந்து 450 கி.மீ தொலைவில், சத்னாவில் உள்ளது சர்தார் வல்லபாய் படேல் மாவட்ட மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது.
Man Rides Into Hospital On Bike, Recreates ‘3 Idiots’ Scene
Grandfather On Bike, He Rides Up To Hospital’s Emergency Ward pic.twitter.com/m2ZS8qc1wq— Anurag Dwary (@Anurag_Dwary) February 11, 2024
நீரஜ் குப்தா என்ற நபரின் தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து, திடீரென மயக்கமடைந்திருக்கிறார். இதனால், என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்ற நீரஜ் குப்தா, தன்னுடைய நண்பர் ஒருவரின் உதவியுடன் மயக்கமடைந்த தாத்தாவை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வரை பைக்கிலேயே கொண்டு சென்றார். அங்கு சிலரின் உதவியுடன் தத்தாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அது தொடர்பான வீடியோதான், சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.