சென்னை வந்த பா.ஜ.க. தலைவர் நட்டா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசுகையில்,
“திருவள்ளுவர், பாரதியார் ஆகியோர் நாட்டுக்குச் செய்த தியாகங்களை நினைவு கூறுகிறேன். பாஜக தலைவர்களின் இதயத்தில் தமிழகம் இருக்கிறது. குறிப்பாகப் பிரதமர் மோடிக்கு தமிழகம் மிகவும் பிடிக்கும். உலகத்தில் எந்த இடத்துக்குச் சென்றாலும் தமிழகம் குறித்துப் பேசுவார். இங்கிருந்து செங்கோலைக் கொண்டு சென்று நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறோம்.

எம்.எஸ்.ஸ்வாமிநாதனுக்கு

தமிழகத்தில் மிகவும் மோசமான தலைவர் இருக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து கொண்டு இருக்கிறது. இன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டு இருப்போருக்கு அறிவு இல்லை. வரும் வழியில் லைட் இல்லை. மிரட்டி கடைகளை மூட வைத்திருக்கிறார்கள். எதற்காக இவ்வளவு போலீஸ் இருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா?
அதற்காக தான் என் மண் என் மக்கள் யாத்திரை நடத்துகிறோம். விரைவில் யாத்திரை 234 தொகுதிகளிலும் பூர்த்தி அடையும். உழல் இல்லாத ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். யார் உழல் செய்தாலும் விட்டு வைக்க மாட்டோம்.
உலக பொருளாதாரத்தில் 5 வது இடத்துக்கு வந்து இருக்கிறோம். மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் 3 வது இடத்துக்கு வந்துவிடுவோம்.

வாகன உற்பத்தியில் ஜப்பானை முந்தி விட்டோம். 97 % மொபைல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ராம ஜென்ம பூமியை மீட்டு இருக்கிறோம். எனவே நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. மீண்டும் நீங்கள் மோடிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் திமுக பொய் சொல்லி கொண்டிருக்கிறது. ஏராளமான திட்டங்களை தமிழகத்துக்கு செய்து இருக்கிறோம். குடும்ப அரசியல், கொள்ளை, கட்ட பஞ்சாயத்து செய்வது தான் திமுக. சிறையில் இருக்கும் அமைச்சர்களுக்கு இன்னும் ஊதியம் செல்கிறது. கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். மீண்டும் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன்.” என்றார்.