சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் (2024.02.09) பாராளுமன்ற வளாகத்தை அண்டிய ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகில் இடம்பெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் எண்ணக்கருவுக்கு ஏற்ப இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் நாடு முழுவதிலும் உள்ள 107 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் 11 பிராந்திய வேலைத்தளங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் இந்தப் பேருந்துகளை புதுப்பித்துள்ளனர்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, குணதிலக ராஜபக்ஷ, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் டி அல்விஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக, இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.