India vs Australia U19 World Cup 2024 Final: பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க்கில் இன்று நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைபற்றி உள்ளது. இரு அணிகளும் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்திய அணி கேப்டன் உதய் சஹாரனின் சிறப்பான ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. மறுபுறம், ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி பைனலுக்கு முன்னேறியது.
Relentless Australia down India in Benoni to clinch their fourth #U19WorldCup title #INDvAUS pic.twitter.com/wn7GPVc3xc
— ICC (@ICC) February 11, 2024
மிகவும் பரபரப்பான இந்த இறுதி போட்டியில், ஆஸ்திரேலியா U19 அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பத்திலேயே இந்திய அணி சாம் கான்ஸ்டாஸ் விக்கெட்டை எடுத்தாலும், ஆஸ்திரேலியா அணியின் பேட்டர்கள் சிறப்பாக விளையாடினர். ஹாரி டிக்சன் 42 ரன்களும், கேப்டன் ஹக் வெய்ப்ஜென் 48 ரன்களும், ஹர்ஜாஸ் சிங் 55 ரன்களும் அடித்தனர். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய ஆலிவர் பீக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் அடித்தார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்களை இழந்து 253 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
Innings Break!#TeamIndia need to win the #U19WorldCup!
wickets for Raj Limbani
wickets for Naman Tiwari
A wicket each for Saumy Pandey & Musheer Khan
Over to our batters
Scorecard https://t.co/RytU4cGJLu#U19WorldCup | #INDvAUS pic.twitter.com/4SnelO2HMi
— BCCI (@BCCI) February 11, 2024
254 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கி இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. அர்ஷின் குல்கர்னி, கேப்டன் உதய் சஹாரன், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, ஆரவெல்லி அவனிஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் மறுபுறம் நிதானமாக ஆடிய ஆதர்ஷ் சிங் 42 ரன்களில் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய முருகன் அபிஷேக் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 43.5 ஓவரில் இந்திய அனைத்து விக்கெட்களையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா U19 அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து ஐசிசி கோப்பைகளை இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைபற்றியது. அதே போல, 50 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. தற்போது 2024 U19 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.