155 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று (11) நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலாவது துடுப்பெடுத்தாடினார். அவர்கள் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 308 ஓட்டங்களைப் பெற்றனர்.

இலங்கை அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய அணித்த தலைவர் குசல் மெண்டிஸ் 61 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 52 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 50 ஓட்டங்களையும், சரித் அஸலங்க ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக யுணஅயவரடடயா ழுஅயசணயi 3 விக்கெட்டுக்களையும்இ குயணயடாயங குயசழழஙiஇ ழேழச யுhஅயனஇ ஞயளை யுhஅயன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இந்நிலையில் 309 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 34 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி; 2 விக்கெட்டுக்களுக்கு 143 ஓட்டங்களை எடுத்தபோது, கடைசி 8 விக்கெட்டுகளுக்கு 10 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

புந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக, வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், டில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், பிரமோத் மதுஷான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேலும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 2-0 என்ற நிலையில்; இலங்கை அணி வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.