திருமண வரன் பார்பதற்கான இணையதளங்கள் வந்த பிறகு, அதனை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளும் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருவது வாடிக்கையாகி உள்ளது.
தற்போது, உத்தரப்பிரதேசத்தில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரையே திருமணம் செய்து ஏமாற்றி இருக்கிறார் ஒரு பலே ஆசாமி. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ரேஸ்தா தாக்குர் என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி திருமணம் செய்து கொள்ள திருமண இணையத்தளம் மூலம் வரன் தேட ஆரம்பித்தார். ஸ்ரேஸ்தா காவல்துறையில் செய்த செயல்பாடுகளால் அவரை பெண் சிங்கம் என்று அழைத்து வந்தனர்.

இந்நிலையில் தான், மேட்ரிமோனியல் தளத்தில் ரோஹித் ராஜ் என்பவர், தான் ஐ.ஆர்.எஸ். அதிகாரி என்றும், ராஞ்சியில் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அவரது ஜாதகம் ஒத்துப்போனதால் அவரை திருமணம் செய்ய ஸ்ரேஸ்தாவும் அவருன் குடும்பத்தாரும் முடிவு செய்தனர். ரோஹித் ராஜ் குறித்து ஸ்ரேஸ்தா உறவினர்கள் விசாரித்தனர். அவர்களின் விசாரணையில் ரோஹித் ராஜ் ஐ.ஆர்.எஸ்.அதிகாரி என்பதை உறுதி செய்தனர்.
ஆனால் திருமணமான சில மாதங்களில் ரோஹித் ராஜ் உண்மையில் ஐ.ஆர்.எஸ்.அதிகாரி கிடையாது என்றும், பொய் சொல்லி திருமணம் செய்து இருக்கிறார் என்பதும் ஸ்ரேஸ்தாவிற்கு தெரிய வந்தது. ஆனாலும் திருமணம் செய்து கொண்டதால் அவருடன் ஸ்ரேஸ்தா வாழ ஆரம்பித்தார். ஆனால் ஸ்ரேஸ்தாவின் பெயரை சொல்லி ரோஹித் பல்வேறு இடங்களில் பணம் வசூலிக்க ஆரம்பித்தார். இது குறித்து ரோஹித்திடம் ஸ்ரேஸ்தா பேசிப்பார்த்தார்.

அப்படி இருந்தும் ஸ்ரேஸ்தா பெயரை சொல்லி பணம் வசூலிப்பதை ரோஹித் நிறுத்தவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் திருமணமான இரண்டு ஆண்டில் ரோஹித்தை ஸ்ரேஸ்தா விவாகரத்து செய்து விட்டார். ஆனால் பிரச்னை அத்தோடு முடியவில்லை. தொடர்ந்து ஸ்ரேஸ்தாவின் பெயரை சொல்லி ரோஹித் பணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதையடுத்து ஸ்ரேஸ்தா காஜியாபாத் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரோஹித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கு காரணமாக தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY