IND vs ENG 3rd Test: இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து, அவர் அனில் கும்ப்ளேவிடம் இருந்து தனது இந்திய அணி டெஸ்ட் தொப்பியை வாங்கினார். குறிப்பாக, இந்திய அணியின் 311ஆவது வீரராக சர்ஃபராஸ் கான் அறிமுகமாகி உள்ளார்.
நீண்ட போராட்டத்திற்கும், காத்திருப்பிற்கும் பிறகு சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது குடும்பத்திற்கும் இது ஒரு பெரிய தருணமாக அமைந்தது. போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அவரது தந்தை மற்றும் சர்ஃபராஸ் கானின் மனைவி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது, சர்ஃபராஸ் கான் இந்திய அணி தொப்பி வாங்கிய பின்னர் குடும்பத்தினர் வாழ்த்து பெற வந்தார்.
Sarfaraz Khan’s father kissing the Test cap of his son.
– Emotions at Rajkot. pic.twitter.com/ozhkxDmPvF
— Johns. (@CricCrazyJohns) February 15, 2024
அப்போது, சர்ஃபராஸ் கானின் தந்தை நௌஷத் கான், அவரை கட்டுபிடித்து அரவணைத்துக்கொண்டார். குறிப்பாக, இந்திய அணியின் தொப்பியை முத்தமிட்டது மட்டுமின்றி உணர்ச்சிவசத்தில் ஆனந்த கண்ணீர்விட்டும் தனது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்பாரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Vido of the day.
Emotions from Sarfaraz Khan, his father & wife during cap presentation – he has made everyone proud. pic.twitter.com/JeXsmeKoof
— Johns. (@CricCrazyJohns) February 15, 2024
குறிப்பாக, சர்ஃபராஸ் கானின் தந்தை நௌஷத் கான் இன்று அணிந்திருந்த டீ-சர்ட்டில் ‘கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு’ (Cricket is Gentleman’s Game) என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த வாசகத்தில் ஜென்டில்மேன்களின் என்ற வார்த்தை அடிக்கப்பட்டு ‘அனைவருக்குமான’ (Cricket is Everyone’s game) என சேர்க்கப்பட்டிருந்தது.
Sarfaraz Hugging his father after getting the India cap.
– The moment of the series. pic.twitter.com/dcAnwx1zU3
— Johns. (@CricCrazyJohns) February 15, 2024