சென்னை: தமிழ்நாடுஅரசின் நிதி நிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதுதொடர்பான லோகோவை தமிழ்நாடு அரசி வெளியிட்டு உள்ளது. “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை குறிக்கும் வகையில், நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ளது. “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம், […]
