பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 தொடரின் அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிடுகிறது. முதல் கட்டமாக 15 நாட்கள் நடைபெறும் போட்டிகளின் தேதியை பிசிசிஐ அறிவிக்க இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வர இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு எஞ்சிய போட்டிகளுக்கான தேதிகள் மற்றும் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன. ஐபிஎல் 2024 தொடர் அதிகாரப்பூர்வமாக மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்றாலும் எங்கு நடைபெறுகிறது என்பதை பிசிசிஐ அறிவிக்க உள்ளது.
ஐபிஎல் 2024 அட்டவணை எப்போது அறிவிக்கப்படும்?
ஐபிஎல் 2024 தொடருக்கான அட்டவணை பிப்ரவரி 22, 2024 வியாழக்கிழமை பிசிசிஐ அறிவிக்க உள்ளது.
ஐபிஎல் 2024 அட்டவணை எந்த நேரத்தில் அறிவிக்கப்படும்?
ஐபிஎல் 2024 அட்டவணை இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்கு அறிவிக்கப்படும். தொலைகாட்சிகளில் ப்ரீ ஷோ மாலை 4:00 முதல் 4:30 மணிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஐபிஎல் 2024 அட்டவணை அறிவிப்பின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்க்கலாம்?
ஐபிஎல் 2024 அட்டவணை அறிவிப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்
ஐபிஎல் 2024 அட்டவணை அறிவிப்பை ஆன்லைனில் இலவசமாக எந்த ஸ்டீமிங்கில் காணலாம்?
ஐபிஎல் 2024 அட்டவணை அறிவிப்பின் நேரடி ஒளிபரப்பை ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பாகும். அதன் செயலியை பதிவிறக்கம் செய்து நீங்கள் கண்டுகளிக்கலாம்.
ஐபிஎல் அட்டவணை எதிர்பார்ப்பு
இந்த ஆண்டு தொடங்கும் ஐபிஎல் 2024 தொடரின் முதல் 15 அல்லது 20 போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மீதமுள்ள அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று பிசிசிஐ தகவலாக தெரிவித்துள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் மட்டுமே அதை உறுதிப்படுத்த முடியும்.