திருவனந்தபுரம்: “தண்ணீர் மாத்தன் தினங்கள்” மற்றும் “சூப்பர் சரண்யா” போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் கிரிஷ் ஏ.டி. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பிரேமலு. இந்த படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குநர் கிரிஷ். ரொமாண்ட்டிக் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இந்த மலையாளத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.