நான் செய்யும் தொழில் மேல் சத்தியம் : மன்னிப்பு கேட்டு தன்யா பாலகிருஷ்ணா அறிக்கை
தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கிண்டல் செய்து 12 ஆண்டுகளுக்கு முன் வலைதளத்தில் பதிவிட்டதற்கு இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார் கன்னட நடிகை தன்யா பாலகிருஷ்ணா. தமிழில் ‛‛ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. 12 ஆண்டுகளுக்கு முன் சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்பாக அப்போது ‛‛தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்தீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம். … Read more