பெங்களூரு பெங்களூரு நீதிமன்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஷ் என்பவர் சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 4-ந் தேதி (நேற்று) அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், […]
