இலங்கை மற்றும் பங்களாதேஸ் இடையேயான இருபதுக்கு 20 போட்டியில் இரண்டாவது ஆட்டம் இன்று (06) இடம்பெறவுள்ளது. அதற்கிணங்க போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 5.30 மணிக்கு Sylhet மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் அதனால் போட்டியில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஸுடன் இறுதியாக இடம்பெற்ற இருபதுக்கு -20 போட்டிகள் மூன்றிலும் இலங்கை வெற்றிபெற்றமை விசேட அம்சமாகும்.