உச்ச நீதிமன்றம் கடந்த மாதம், தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தை சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்தது. அதோடு, தேர்தல் பத்திரங்களின் அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-க்குள் எஸ்.பி.ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதை மார்ச் 13-க்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நான்கு மாத காலம் எஸ்.பி.ஐ அவகாசம் கேட்க, `மார்ச் 12-க்குள் மொத்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கண்டித்துகொண்டது. அதன்படி மார்ச் 12-ம் தேதி மாலை தேர்தல் பத்திர தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ ஒப்படைத்தது.
அதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயமாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ அளித்த தேர்த பத்திர தரவுகளை, தேர்தல் ஆணையம் இரண்டு பட்டியலாக தனது இணையதளப் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறது.

அதில், ஒரு பட்டியியலில் எந்தெந்த நிறுவனங்கள்/தனிநபர் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள் என்று தரவுகள் இருக்கின்றன. மற்றொரு பட்டியலில், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன என்று தரவுகள் இருக்கின்றன. ஆனால், எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றன எனத் தரவுகள் இல்லை. தேர்தல் பத்திர தரவுகளைக் காண பின்வரும் இரண்டு லிங்கை கிளிக் செய்யவும்…
இரண்டாம் பட்டியல் லிங்க்: https://www.eci.gov.in/eci-backend/public/api/download?url=LMAhAK6sOPBp%2FNFF0iRfXbEB1EVSLT41NNLRjYNJJP1KivrUxbfqkDatmHy12e%2FzBiU51zPFZI5qMtjV1qgjFmSC%2FSz9GPIId9Zlf4WX9G%2FyncUhH2YfOjkZLtGsyZ9B56VRYj06iIsFTelbq233Uw%3D%3D