நடிகர் அஜித் நடிக்கும் 63 படம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக படத்தைத் தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று இரவு தொடங்கியே அஜித் படத்தின் புதிய அப்டேட் வரப்போவதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசிக்கொண்டே இருந்தனர். இந்நிலையில், அஜித்தின் அதிகாரப்பூர்வ மேலாளரான சுரேஷ் சந்திரா இன்று மாலை 6:31 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்தார். அதன்படி, அஜித்தின் 63 வது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இயக்குநர் ஆதிக் முன்னதாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவிருக்கிறார். கடைசியாக அஜித்தின் வீரம் படத்திற்கு அவர் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் சூழலில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவாக படப்பிடிப்பை முடித்து 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். இதையும் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறார்கள்.
With Wholesome Humbleness herewith, we Announce the title of AK’s Next Movie Called as #GoodBadUgly #AjithKumar @Adhikravi @ThisIsDSP @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl@SureshChandraa @supremesundar#kaloianvodenicharov #Anuvardhan @valentino_suren@Donechannel… pic.twitter.com/EU4qKO5fEO
— Mythri Movie Makers (@MythriOfficial) March 14, 2024
நீண்ட நாட்கள் அஜித் படம் ஒன்றின் அப்டேட் வந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.