
பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி!
இயக்குனர் சுந்தர்.சி கடந்த பல வருடங்களாக தமிழில் உள்ளத்தை அள்ளித்தா,அருணாச்சலம், வின்னர், அரண்மனை 1,2 ,3 என குடும்பங்கள் கொண்டாடும் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். தற்போது 'அரண்மனை 4' படத்தை இயக்கியுள்ளார். விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் இப்படத்திற்கு பிறகு ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் சுந்தர்.சி.
அந்த தகவலின் படி, சுந்தர்.சியை அழைத்து ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் கதை ஒன்று கேட்டுள்ளார். அவருக்கு கதை பிடித்து போனதால் சுந்தர்.சியை திரைக்கதை உருவாக்குமாறு கூறியுள்ளாராம். மேலும், இந்த கதை இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதை என்பதால் இதில் மற்றொரு கதாநாயகனாக நடிக்க பாபி டியோல் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.