கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு!

5000 யிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்பு-

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (22) விசேட இப்தார் நோன்பு திறக்கும் வைபவம் இடம்பெற்றது. 

ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில்  இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், இவ் இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள்  பங்குபற்றினர். 

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன்,நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முஹம்மட் முஹம்மட் ஹரீஸ், மௌலானா, முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு புனித அல் குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

றமழான் மாதத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்திற்கு 5 இலட்சம் ரூபாய் நிதியுதவியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.