
'தேவரா' படத்தை வாங்கிய கரண் ஜோஹர்
தெலுங்குத் திரையுலகத்தை வட இந்தியா வரை கொண்டு சென்றவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர். அவருக்கு சொந்தமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் 'பாகுபலி 1, பாகுலி 2' ஆகிய படங்களை வட இந்தியாவில் வினியோகம் செய்து அந்தப் படங்களை பிரம்மாண்ட வெற்றி பெற வைத்தது.
சுமார் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்ட தெலுங்குப் படமான 'தேவரா' படத்தை வட இந்தியாவில் வினியோகிக்க உள்ளது. ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கும் இந்த தெலுங்குப் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. ஏஏ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வெளியிட உள்ளது கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ். அதன் காரணமாக 'தேவரா' படத்திற்கு வட இந்தியாவில் நிறைய தியேட்டர்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.