தனுஷ் தந்தை என்று உரிமை கோரிய மேலூர் கதிரேசன் மரணம்

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு மேலூர் கோர்ட், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

பல ஆண்டுகள் நடந்த இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் தனுஷ் தாக்கல் செய்தது போலி ஆவணங்கள் என்றும் மேலூர் தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கதிரேசன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 70. தனித்து விடப்பட்ட மீனாட்சி வழக்கை தொடர்ந்து நடத்துவாரா என்பது தெரியவில்லை. அதிக படிப்பறிவு இல்லாத இந்த தம்பதிகள் இவ்வளவு பெரிய சட்டப் போராட்டம் நடத்தியதும் பற்றியும், அவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்கள் பற்றியும் இன்னும் யாரும் அறிந்திருக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.