புதுடில்லி ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐவர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் பிடிபட்டனர். இதையொட்டி சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்தியப் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் […]
