மத்தியப் பிரதேசத்தில் 17 வயது சிறுவன், நேற்று அதிகாலை விலையுயர்ந்த காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று, பைக்கில் சென்ற தம்பதியினர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் போலீஸ் விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மத்தியப் பிரதேசத்தில் பிரபல ரியல் எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்தவரென்று தெரியவந்தது.
VEDANT AGARWAL
Age: 17 years, 8 months
Location: Pune
Father: Vishal Agarwal, Owner, Bramha Realty
Car: Porsche Taycan
Speed: 150 km/h
Registration: Unregistered
Number: No license plate
Victims: Two 24-yr-old IT engineers from M.P.
Time for grant of bail: 15 hours pic.twitter.com/iGNTuB5XAB— Shiv Aroor (@ShivAroor) May 20, 2024
இவர், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்காக நேற்று முன்தினம் இரவு தன் நண்பர்களை அழைத்து பார் (BAR) ஒன்றில் பார்ட்டி கொடுத்திருக்கிறார். பார்ட்டி முடித்துவிட்டு தனது விலையுயர்ந்த காரை நேற்று அதிகாலை சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அப்போது, அங்கிருந்தவர்கள் காரிலிருந்து சிறுவனை சம்பவ இடத்திலேயே பிடித்து சாரமாரியாகத் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர்.
பின்னர், உயிரிழந்தவர்களின் நண்பர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார், சம்பந்தப்பட்ட சிறுவன், அவரின் தந்தை மற்றும் மதுபானம் வழங்கிய பார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். மேலும், மதுபோதையில் கார் ஓட்டியதே விபத்துக்கான காரணம் என்று போலீஸார் தெளிவாகக் கூறினர். இருப்பினும், சம்பவம் நடந்த அடுத்த 15 மணிநேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு இதில் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

கூடவே சிறுவனுக்கு, `ஏர்வாடா போக்குவரத்து காவல்துறையுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும். விபத்து குறித்து ஒரு கட்டுரை எழுதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குடிப்பழக்கத்தை கைவிட சிகிச்சை பெறவேண்டும், மனநல ஆலோசனை பெறவேண்டும்’ என நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சிறுவன் தன் நண்பர்களுடன் பாரில் மது அருந்தும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், அந்த சிறுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது தெளிவாகத் தெரிகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb